ADDED : மார் 31, 2024 04:26 AM
கோயில்
பங்குனி திருவிழா: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, சிம்மவாகனத்தில் அம்மன் எழுந்தருளல், மாலை 6:00 மணி, கொடிப்பட்டத்தைப் பெற்று தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலுக்கு அம்மன் புறப்படுதல், கொடியேற்றம், இரவு 11:00 மணி.
பங்குனி திருவிழா - மாவிளக்கு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், மில்கேட், காலை 10:00 மணி, பூத்தட்டு ஊர்வலம், மதியம் 3:00 மணி, மஞ்சள் நீராட்டு விழா, இரவு 12:00 மணி.
ஸ்ரீமகா கணபதி, மகா சுதர்சன, தன்வந்திரி, மகாலட்சுமி, நவக்கிரஹ ேஹாமம், ஸ்ரீ க்ரோதி வருஷ பஞ்சாங்கம் வெளியீடு, தாம்பிராஸ் திருமண மகால், எஸ்.எஸ்.காலனி, காலை 8:00 மணி.
கிறிஸ்துவின் சபை ஞாயிறு ஆராதனை, சொற்பொழிவு: விசுவாசபுரி, ஞானஒளிவுபுரம், மதுரை, பங்கேற்பு: தேவமாணிக்கம், காலை 10:00 மணி.
பக்தி சொற்பொழிவு
அவ்வைக்குறள்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
வாழ்க்கை லட்சியம்: நிகழ்த்துபவர் - சுவாமி பிரபு பிரேமானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
திருக்குறள் - நிகழ்த்துபவர் - கிருஷ்ணானந்த சைதன்யா, தெய்வநெறிக் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, இரவு 7:30 மணி.
டி.ஆர். பத்மநாபய்யர் 125வது ஆண்டு ஜெயந்தி விழா: 3, அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, பகவத் கீதையும் திருக்குறளும் - பேசுபவர்: கீதா பவனம் நிர்வாகக்குழு அங்கத்தினர் டி.ஆர். தாமோதரன், மாலை 6:30 முதல் 8:00 மணி வரை.
ஸ்ரீக்ரோதி வருஷ வாக்கிய பஞ்சாங்கம் வெளியீடு, காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை, மாலை 4:00 மணி. ஏற்பாடு: தமிழ்நாடு பிராமணர் சங்கம் புதார் கிளை.
நாம சங்கீர்த்தனம், 23 டி. சுப்பிரமணிய பிள்ளை தெரு, மதுரை, ஏற்பாடு: சத்குரு ஸ்ரீ ஞானானந்த நாம மண்டலி. மாலை 4:00 மணி.
பொது
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யாதேவியை ஆதரித்து தேர்தல் பொதுக்கூட்டம்: கே.புதுார், மதுரை, பங்கேற்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இரவு 7:00 மணி.
நீங்களும் அரசாங்க அதிகாரி ஆகலாம் - கருத்தரங்கு: மதுரை ஐ.ஏ.எஸ் அகாடமி, கே.கே.நகர், மதுரை, பங்கேற்பவர்: ஓய்வுபெற்ற டி.ஜி.பி., சைலேந்திர பாபு, காலை 10:00 மணி.
காந்திய சிந்தனை சான்றிதழ் பயிற்சி வகுப்பு: ஆரோ லேப், வீரபாஞ்சான், சிறப்புரை: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், ஏற்பாடு: காந்தி மியூசியம், காந்தியக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஆரோலேப், காலை 9:30 மணி.
யானைமலை கிரீன் பவுண்டேஷன் 156வது வார விழா: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, பங்கேற்பு: ஓய்வுபெற்ற உதவி சுற்றுலா அலுவலர் இரா.ரவி, காலை 7:45 மணி.
வையத் தலைமை கொள் - மகளிர் தின விழா: இந்திய மருத்துவக் கழக அரங்கு, அரசு மருத்துவக் கல்லுாரி வளாகம், மதுரை, தலைமை: மதுரை இலக்கியப் பேரவை நிறுவனர் சண்முகதிருக்குமரன், மாலை 6:00 மணி.
கண்காட்சி
குளு குளு பனிமலை ஸ்னோ வேர்ல்டு திருவிழா, ஷாப்பிங் எக்ஸ்போ: காந்தி மியூசிய மைதானம், மதுரை, மாலை 4:30 முதல் இரவு 9:00 மணி வரை.
ஹஸ்டகலா - கைவினைப் பொருட்கள், ஜவுளி, வீட்டு அலங்காரம், நகைகள் கண்காட்சி: ஜே.சி.ரெசிடென்சி, சின்ன சொக்கிகுளம், மதுரை, காலை 11:00 முதல் இரவு 8:30 மணி வரை.
