UPDATED : மே 26, 2026 10:23 PM
ADDED : மே 26, 2026 10:03 PM
வைகாசி திருவிழா * மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மன் புது மண்டபத்தில் எழுந்தருளல், மாலை 6:00 மணி.
* கள்ளழகர் கோயில், அழகர்கோவில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுந்தரராஜ பெருமாளுக்கு வசந்த மண்டபத்தில் சிறப்பு அலங்காரம், பூஜை, தீபாராதனை, மாலை 6:30 முதல் இரவு 7:30 மணிக்குள்.
* முருகன் கோயில், சோலைமலை, ஷண்முகார்ச்சனை, காலை 11:00 மணி, அபிஷேகம், மதியம் 3:00 மணி, சுவாமி புறப்பாடு, மாலை 5:00 மணி, தீபாராதனை, மாலை 6:00 மணி.
* பத்தாம் நாள்: ஜெனகை மாரியம்மன் கோயில், சோழவந்தான், கோயிலில் இருந்து அம்மன் புறப்படுதல், மதியம் 3:00 மணி, மந்தைக்களத்தில் அம்மன் எழுந்தருளுதல், மாலை 4:00 மணி, பக்தர்கள் பூக்குழி இறங்குதல், மாலை 5:00 மணி, மார்க்கெட் ரோடு வழியாக அம்மன் கோரத வாகனத்தில் கோயில் வந்தடைதல், இரவு 8:15 மணி, கலை நிகழ்ச்சிகள் இரவு 7:00 மணிக்கு மேல்.
* ஒன்பதாம் நாள்: திரவுபதி அம்மன் கோயில், தெற்குமாரட் வீதி, மதுரை, பராசக்தி அம்மன் அலங்காரத்தில் திருப்பல்லக்கு, காலை 9:00 மணிக்கு மேல், அரவான் பூஜை, சிம்ம வாகனம், காளியம்மன் அலங்காரம், இரவு 7:00 மணிக்கு மேல்.
* கூடழலகர் கோயில், மதுரை, திருப்பல்லக்கில் பெருமாள் உலா, காலை 9:00 மணி, சேஷ வாகனம் வீதியுலா, இரவு 7:00 மணிக்கு மேல்.
* திருமறைநாதர் சுவாமி கோயில், திருவாதவூர், சப்பரத்தில் அம்மன், சுவாமி எழுந்தருளுதல், காலை 9:00 மணி, கமலம், கங்காளநாதர் புறப்பாடு, மாலை 4:00 மணி, கற்பக விருட்ச வாகனங்களில் அம்மன், சுவாமி எழுந்தருளுதல், இரவு 8:00 மணி.
* ராஜகாளியம்மன் கோயில், மேட்டுப்புஞ்சை, சிந்தாமணி, மதுரை, முளைப்பாரி ஊர்வலம், மாலை 6:00 மணி.
பக்தி சொற்பொழிவு * திருவருட்பா: நிகழ்த்துபவர் -- விஜயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* ஏகாதசி முன்னிட்டு ராம நாம சங்கீர்த்தனம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
* அஷ்டாவக்கிர கீதை: நிகழ்த்துபவர் -- ஜனார்த்தனன், சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
* ஏகாதசி முன்னிட்டு ஹரே ராமா மஹா மந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 6:00 மணி முதல்.
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
பொது * இ.எஸ்.ஐ.சி., சார்பில் குறைதீர் கூட்டம்: இ. எஸ்.ஐ.சி., அலுவலகம், பழங்காநத்தம், மதுரை, ஏற்பாடு: மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம், காலை 9:30 மணி.
* குழந்தைகளுக்கான காகிதத்தில் கலைவண்ணம், அபாகஸ் உள்ளிட்ட பயிற்சிகள் -- குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, ஏற்பாடு: பொதுநுாலக இயக்ககம், காலை 11:00 மணி முதல்.
விளையாட்டு
* 16 வயதிற்குட்பட்டோருக்கான மாநில அளவிலான 50 ஓவர் இன்டர் அகாடமி கிரிக்கெட் போட்டி: மதுரைக் கல்லுாரி, மாணிக்கம் ராமசாமி கல்லுாரி, ஸ்ரீராம் நல்லமணி பள்ளி, ஏற்பாடு: சேது கிரிக்கெட் பவுண்டேஷன், மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்கம், காலை 8:00 மணி.
