தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இன்றைய நிகழ்ச்சி / மே 28 க்குரியது 

இன்றைய நிகழ்ச்சி / மே 28 க்குரியது 

இன்றைய நிகழ்ச்சி / மே 28 க்குரியது 


ADDED : மே 27, 2026 08:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2026 08:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வைகாசி திருவிழா * மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மன் புது மண்டபத்தில் எழுந்தருளல், மாலை 6:00 மணி.

* கள்ளழகர் கோயில், அழகர்கோவில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுந்தரராஜ பெருமாளுக்கு வசந்த மண்டபத்தில் சிறப்பு அலங்காரம், பூஜை, தீபாராதனை, மாலை 6:30 முதல் இரவு 7:30 மணிக்குள்.

* முருகன் கோயில்,சோலைமலை, ஷண்முகார்ச்சனை, காலை 11:00 மணிக்கு, அபிஷேகம், மதியம் 3:00 மணி, சுவாமி புறப்பாடு, மாலை 5:00 மணி, தீபாராதனை, மாலை 6:00 மணி.

* 11ம் நாள்: ஜெனகை மாரியம்மன் கோயில், சோழவந்தான், சிதம்பர விநாயகர் கோயிலுக்கு சப்பரத்தில் அம்மன் புறப்பாடு, அபிஷேகம், அலங்காரம், காலை 10:00 மணி, யானை வாகனத்தில் அம்மன் திருவீதியுலா, முளைப்பாரி ஊர்வலம், இரவு 9:00 மணி.

* பத்தாம் நாள்: திரவுபதி அம்மன் கோயில், தெற்குமாரட் வீதி, மதுரை, அம்மனும், சுவாமியும் அலங்காரம், காலை 9:00 மணிக்கு மேல்,  கிருஷ்ணன் அர்ஜூனன் அலங்காரம், இரவு 7:00 மணிக்கு மேல்.

* கூடழலகர் கோயில், மதுரை, திருப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலம், காலை 6:30 மணி, யானை வாகனம் வீதியுலா, இரவு 7:00 மணிக்கு மேல்.

* திருக்கல்யாணம்: திருமறைநாதர் சுவாமி கோயில், திருவாதவூர், காலை 9:30 முதல் 10:00 மணிக்குள், கமலம், கங்காளநாதர் புறப்பாடு, மாலை 4:00 மணி, யானை வாகனம், புஷ்ப பல்லக்கில் அம்மன், சுவாமி எழுந்தருளுதல், இரவு 10:00 மணி.

* ராஜகாளியம்மன் கோயில், மேட்டுப்புஞ்சை, சிந்தாமணி, மஞ்சள் நீராட்டு விழா, பிரசாதம் வழங்குதல், காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை, சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், மாலை 5:00 மணி.

கோயில் * கும்பாபிஷேகம்: மஹா துர்க்கை அம்மன் கோயில், சிலைமான், திருமுறை பாராயணம், விநாயகர் பூஜை, ஹோமம், யாகசால பூஜைகள், அதிகாலை 5:15 மணி முதல்.

* பிரதோஷ பூஜை: காட்டுப்பிள்ளையார் கோயில், நரிமேடு, மதுரை, மாலை 4:30 மணி.

* குருவார சிறப்பு பூஜை: மஹா பெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

* கும்பாபிஷேகம்: முத்துமாரியம்மன் கோயில், மேலுார், காலை 8:35 மணி.

* கும்பாபிஷேகம்: களநீர் உடைய அய்யனார் கோயில், உதினிபட்டி, காலை 10:00 மணி.

பக்தி சொற்பொழிவு * திருவாசகம்: நிகழ்த்துபவர் -– வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* தியானமும், யோகமும்: நிகழ்த்துபவர் -– பிரஜாபதி பிரம்மாகுமாரி சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

*  ஹரே ராமா மஹா மந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 8:00 மணி முதல்.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் –  வாசிநாதம் சுவாமிகள், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், மாலை 6:00 மணி முதல்.

பொது * குழந்தைகளுக்கான காகிதத்தில் கலைவண்ணம், அபாகஸ் உள்ளிட்ட பயிற்சிகள் - குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, ஏற்பாடு: பொதுநுாலக இயக்ககம், காலை 11:00 மணி முதல்.

விளையாட்டு

* 16 வயதிற்குட்பட்டோருக்கான மாநில அளவிலான 50 ஓவர் இன்டர் அகாடமி கிரிக்கெட் போட்டி: மதுரைக் கல்லுாரி, மாணிக்கம் ராமசாமி கல்லுாரி, ஸ்ரீராம் நல்லமணி பள்ளி, ஏற்பாடு: சேது கிரிக்கெட் பவுண்டேஷன், மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்கம், காலை 8:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us