UPDATED : மே 01, 2026 11:08 PM
ADDED : மே 01, 2026 09:42 PM
கோயில் அழகர்கோவில் சித்திரை பெருவிழா - 6ம் நாள்: வீரராகவ பெருமாள் கோயில், வண்டியூர், மதுரை, கள்ளழகர் ஏகாந்த சேவை, காலை 6:00 மணி, சேஷ வாகனத்தில் தேனுார் மண்டபம் புறப்பாடு, காலை 9:00 மணி, கருட வாகனத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம், மதியம் 3:00 மணி, ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம், இரவு 11:30 மணி முதல்.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 மணி.
பக்தி சொற்பொழிவு
லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் 'சத்தர்ஸனம்' விளக்கவுரை, காலை 9:15 மணி.
தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தரகண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
பொது இயற்கை சார்ந்த, மகளிர் சுய உற்பத்தி பொருட்களின் ஆரோக்கிய சந்தை: காந்தி மியூசியம், மதுரை, ஏற்பாடு: கிரீன்பெம் உற்பத்தியாளர்கள் நிறுவனம், காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.
சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கோடி லிங்க தரிசனம்: கார்த்திக் தியேட்டர், புதுார், ஏற்பாடு: பிரம்மா குமாரிகள், காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி வரை, மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை.
பணிநிறைவு, பதவி உயர்வு, முழுத் தேர்ச்சி - முப்பெரும் விழா: வாஸன் கண் மருத்துவமனை, சேதுபதி பள்ளி எதிரில், வடக்கு வெளிவீதி, மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் தென்கரை முத்துப்பிள்ளை, சிறப்பு விருந்தினர்கள்: முதன்மை கல்வி அலுவலர்கள் தயாளன், நாகேந்திரன், மாவட்டக் கல்வி அலுவலர்கள் கணேசன், சிவக்குமார், செந்தில்குமார், பாஸ்கரன், உதவி திட்ட அலுவலர் சரவணமுருகன், ஏற்பாடு: தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம், காலை 9:00 மணி, இலவச கண் சிகிச்சை முகாம், மாலை 6:00 மணி வரை.
ஹிந்தி பேச்சுப் பயிற்சி, சான்றிதழ் வகுப்பு தொடக்க விழா: ராகவ் நிகேதன், 4வது தெரு, கூடல்நகர், மதுரை, பயிற்றுநர்: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், இரவு 7:45 மணி.
