ADDED : மே 29, 2026 07:44 PM
வைகாசி திருவிழா
* மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மன் புது மண்டபத்தில் எழுந்தருளல், காலை 10:00 மணி.
* கள்ளழகர் கோயில், அழகர்கோவில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுந்தரராஜ பெருமாளுக்கு வசந்த மண்டபத்தில் சிறப்பு அலங்காரம், பூஜை, தீபாராதனை, மாலை 5:00 மணி.
* முருகன் கோயில், சோலைமலை, ஷண்முகார்ச்சனை, காலை 9:00 மணி, வைகாசி விசாகத்தை முன்னிட்டு மஹா அபிஷேகம், தீபாராதனை, சுவாமி புறப்பாடு, காலை 10:00 மணி, மதியம் 3:00 மணி, மாலை 6:00 மணி.
* சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், சுவாமிக்கு பாலபிஷேகம், காலை 6:00 மணி முதல்.
* தேரோட்டம் – திருமறைநாத சுவாமி கோயில், திருவாதவூர், சுவாமி, அம்மன், சுவாமி கெட்டிச்சப்பரத்தில் புறப்பாடு, காலை 9:00 மணி, தீர்த்தம், காலை 10:30 மணிக்கு மேல் மதியம் 12:00 மணிக்குள், ரிஷப வாகனத்தில் புறப்பாடு, இரவு 8:00 மணி, கொடி இறக்கம், இரவு 9:00 மணி.
* கூடலழகர் கோயில், மதுரை, பெருமாள் தங்கப்பல்லாக்கில் எழுந்தருளல், காலை 9:00 மணி, குதிரை வாகனத்தில் எழுந்தருளி திருத்தேர் கடாட்சித்தல், இரவு 7:00 மணி.
* ஜெனகை மாரியம்மன் கோயில், சோழவந்தான், சப்பரத்தில் அம்மன் புறப்பாடு, காலை 7:00 மணி, அன்னதானம், மதியம் 12:00 மணி, ரிஷப வாகனத்தில் அம்மன் வீதியுலா, இரவு 9:00 மணி.
* திரவுபதி அம்மன் கோயில், தெற்கு மாரட் வீதி, மதுரை, அம்மன், சுவாமி சிம்ம வாகன புறப்பாடு, காலை 7:00 மணி, சவுராஷ்டிரா பள்ளி மைதானத்தில் அக்னி வளர்த்தல், காலை 10:30 மணிக்கு மேல் மதியம் 12:00 மணிக்குள், மைதானத்தில் பூக்குழி இறங்குதல், இரவு 7:00 மணி.
* பாலதண்டாயுதபாணி கோயில், தர்மராஜன் கோட்டை, வாடிப்பட்டி, மவுனகுருசாமி மடத்தில் இருந்து பாதயாத்திரை வந்து சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்தல், காலை 6:00 மணி.
* சித்திவிநாயக செல்வமுத்துக்குமாரசுவாமி கோயில், ரயில்வே காலனி, மதுரை, பால்குடம் திருவிழா, காலை 6:00 மணி முதல்.
* சக்தி விநாயகர் கோயில், ரயில்வே கோட்ட அலுவலக வளாகம், மதுரை, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 10:00 மணி.
* செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 10:00 மணி.
* சக்திவேல் முருகன் கோயில், சிம்மக்கல், மதுரை, கோயிலில் இருந்து புறப்பட்டு அனுமார் கோயில் படித்துரையில் பால்குடம் கட்டி, சிம்மக்கல் சந்தன மாரியம்மன் கோயிலை வலம் வந்து, கீழமாசி, தெற்கு சித்திரை வீதி வழியாக திருப்பரங்குன்றம் சென்று முருகனுக்கு பாலாபிஷேகம், காலை 7:00 மணி முதல்.
* காட்டுப்பிள்ளையார் கோயில், நரிமேடு, மதுரை, முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 8:00 மணி.
* ராஜகாளியம்மன் கோயில், மேட்டுப்புஞ்சை, சிந்தாமணி, மதுரை, கிராமிய இன்னிசை கலைநிகழ்ச்சி, இரவு 7:00 மணி.
கோயில்
* பரிவார தெய்வங்களுக்கு சிலை எடுத்து பெரிய கும்பிடு திருவிழா: புனுகு கருப்பசாமி கோயில், பேரையூர், அய்யனார்புரம் அய்யனார் கலைக்குழுவின் கருப்பசாமி பாடல்கள் இசை நிகழ்ச்சி, மாலை 6:00 மணி.
* குருபெயர்ச்சி மண்டல விழா: சித்திரரத வல்லப பெருமாள் கோயில், குருவித்துறை, குருபகவான் சன்னதி முன்பு அபிஷேகம், பரிகார ஹோமம், அர்ச்சனை, காலை 8:00 முதல் 9:00 மணிக்குள்.
* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 மணி.
பக்தி சொற்பொழிவு
* தாயுமானவர்: நிகழ்த்துபவர் – சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* பகவத் கீதை: நிகழ்த்துபவர் – சுவாமி நித்யதீபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் – சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் ‘சத்தர்ஸனம்’ விளக்கவுரை, காலை 9:15 மணி.
* ஆன்மிக சொற்பொழிவு, கூட்டுப்பிரார்த்தனை: நிகழ்த்துபவர் – ஹரிதாஸ், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, இரவு 7:00 மணி.
* விசாகன் முருகன்: நிகழ்த்துபவர் – வாரியார் கிருஷ்ணா, சுந்தர நாட்டாமை திருமண மண்டபம், பெரிய ரத வீதி, திருப்பரங்குன்றம், வேலுக்கு பாலாபிஷேகம், காலை 10:00 மணி முதல்.
பொது
* பாராட்டு விழா, கலந்துரையாடல் கூட்டம்: அருணாச்சலம் கமலாம்பாள் திருமண மண்டபம், காமராஜர் ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: அமைச்சர் நிர்மல் குமார், எம்.எல்.ஏ.,க்கள் கல்லாணை, கோபிசன், தங்கபாண்டியன், கார்த்திகேயன், முஸ்தபா, ஏற்பாடு: தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம், 56 இணைப்புச் சங்கங்கள், மாலை 4:30 மணி.
* வைகாசி விசாகத்தை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம்: தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லுாரி முன்பு, திருப்பரங்குன்றம் ரோடு, மதுரை, தலைமை: கிளைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஏற்பாடு: ஜெய்ஹிந்த்புரம் தமிழ்நாடு பிராமணர் சங்கம், காலை 6:30 மணி.
* கோடைகால பண்பாட்டு வகுப்பு பூரண விழா: அய்வேத்தனேந்தல் அகமுடையோர் திருமண மண்டபம், அவனியாபுரம், மதுரை, தலைமை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் செல்வராஜ், ஜெயமணி, சைனா சரவணன், சிறப்பு விருந்தினர்: கேந்திர ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீமான் பரமேஸ்வரன், ஏற்பாடு: பாரத பண்பாட்டு கேந்திரம், மாலை 4:30 மணி.
* எதிர்மறை எண்ணங்களை தவிர்த்தல் – சொற்பொழிவு: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மியூசிய செயலாளர் நந்தாராவ், அறிமுக உரை: மியூசிய ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், சிறப்பு விருந்தினர்: ஓய்வு பெற்ற உதவி பதிவாளர் முத்தானந்தம், காலை 10:30 மணி.
* வேடிக்கை கணக்குகள், சிந்தனை விளையாட்டுகள் – குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, ஏற்பாடு: பொது நுாலக இயக்ககம், காலை 11:00 மணி முதல்.
* வைகாசி விசாகம் 54வது ஆண்டு உற்ஸவம்: அபிநவ வித்யா தீர்த்த ஸபா மண்டபம், சிருங்கேரி மடம் வளாகம், பைபாஸ் ரோடு, மதுரை, லட்சார்ச்சனை, காலை 10:00 மணி, வள்ளி திருக்கல்யாணம், மாலை 5:00 மணி, கந்த சஷ்டி பாராயணம், மாலை 6:00 மணி, வாழ்த்துரை: சமூக ஆர்வலர் சொக்கலிங்கம், இரவு 7:30 மணி.
மருத்துவம்
* மகளிருக்கான இலவச மருத்துவ முகாம்: வடமலையான் மருத்துவமனை, சொக்கிகுளம், மதுரை, காலை 10:00 முதல் மதியம் 3:00 மணி வரை.
* தோல் லேசர் நவீன மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை.
விளையாட்டு
* திருநகர் கைப்பந்து போட்டி – 2026: கைப்பந்து மைதானம், அண்ணா பூங்கா, திருநகர், மதுரை, ஏற்பாடு: பேன்யன் பவுண்டேஷன், எம்.ஜி.ஆர்., கைப்பந்து அகாடமி, திருநகர் யூத் கிளப், காலை 6:00 மணி.
