UPDATED : மே 02, 2026 06:48 PM
ADDED : மே 02, 2026 06:31 PM
கோயில்
* அழகர்கோவில் சித்திரை பெருவிழா - 7ம் நாள்: ராமராயர் மண்டபம், மதுரை, மோகினி அவதாரத்துடன் கள்ளழகர் பக்தி உலா, திருமஞ்சனம், காலை 6:00 மணி, அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க அலங்காரத்தில் எழுந்தருளல், மதியம் 2:00 மணி, ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனம், இரவு 11:00 மணி.
மே 3க்குரியது
* கும்பாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், நாகமலை புதுக்கோட்டை, கணபதி ஹோமம், யாகசாலை நிர்மாணம், காலை 9:00 மணி, சித்தி விநாயகர் முதலான பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், காலை 10:00 மணிக்குள், முதற்கால யாக பூஜை, மாலை 6:05 மணி முதல்.
* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மாலை 4:30 மணி.
* ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, ஞானஒளிவுபுரம், மதுரை, காலை 10:00 மணி.
பக்தி சொற்பொழிவு
* லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் 'சத்தர்ஸனம்' விளக்கவுரை, காலை 9:15 மணி, சுவாமி சமானந்தரின் தாயுமானவர் சுவாமி பாடல்கள் விளக்கவுரை, இரவு 7:00 மணி.
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* சித்தர்கள் சிந்தனை கருத்தரங்கு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஒருங்கிணைப்பாளர்: இளங்கோ, இரவு 7:00 மணி.
பொது
* சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கோடி லிங்க தரிசனம்: கார்த்திக் தியேட்டர், புதுார், ஏற்பாடு: பிரம்மா குமாரிகள், காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி வரை, மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை.
* அனுஷம் உற்ஸவத்தை முன்னிட்டு காஞ்சி மஹா பெரியவர் விக்ரகம், வெள்ளிப் பாதுகைக்கு அபிஷேகம், புஷ்பாஞ்சலி, மஹா தீபாராதனை: எஸ்.எம்.கே., திருமண மண்டபம், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, நிகழ்த்துவோர் -- சந்தோஷ் சாஸ்திரிகள் குழு, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.
* பத்திரிகையாளர் திருமலை எழுதிய 'பூமியை வாழ வைப்போம்' - நுால் வெளியீட்டு விழா: வி.எம்.சி., சிற்றரங்கு, சாலைமுத்து நகர் 1வது தெரு, எல்லீஸ் நகர், மதுரை, தலைமை: டாக்டர் சண்முகம், நுால் வெளியிடுபவர்: ஸ்டார் குரு சமூகநல அறக்கட்டளை நிறுவனர் குருசாமி, முதல் பிரதி பெறுபவர்: எழுத்தாளர் தீபா நாகராணி, காலை 10:00 மணி.
