ADDED : மே 07, 2026 08:11 PM
கோயில்
* சித்திரை கடைசி வெள்ளியை முன்னிட்டு சுவாமிக்கு அதிகார தோரணை அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, 4வது தெரு, விளாங்குடி, இரவு 7:00 மணி.
* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 10:30 மணி.
* 108 விளக்கு பூஜை: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, மாலை 6:30 மணி.
பக்தி சொற்பொழிவு
* திருக்குறள்: நிகழ்த்துபவர் – சந்தானம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* பகவத் கீதை: நிகழ்த்துபவர் – கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பொது
* எம்.எஸ்.எம்.இ., துறையில் காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் (கே.வி.ஐ.சி.,) பங்கு குறித்து கருத்தரங்கம்: மடீட்சியா, மதுரை, சிறப்பு விருந்தினர்: ஓய்வு பெற்ற கே.வி.ஐ.சி., கோட்ட இயக்குநர் சின்னதம்பி, மாலை 5:00 மணி.
* மாணவர்களுக்கான ஹிந்து சமய கலாசாரம், பண்பாடு குறித்து கோடைகால இலவச பயிற்சி வகுப்பு: ஸ்ரீமந் நாயகி சுவாமிகள் வேத பாடசாலை, சேர்மன் முத்துராமய்யர் ரோடு, முனிச்சாலை, மதுரை, காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை.
* சர்வ சமய அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், செனாய் நகர், மதுரை, தலைமை: செப்சிரா செயலாளர் மோகன், அருட்செய்தி வழங்குபவர்: எழுத்தாளர் முத்துகிருஷ்ணன், ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம் (செப்சிரா), மாலை 6:00 மணி.
* ‘அறிவியல் கற்கண்டு’ கருத்துரை, அபாகஸ், திரைக்கதை எழுதுதல் உள்ளிட்ட பயிற்சிகள் – குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, ஏற்பாடு: பொது நுாலக இயக்ககம், காலை 11:00 மணி முதல்.
* ‘எதிர்கால கல்வியில் ‘ஏஐ’யின் தாக்கம்’ – படிப்பிடை பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மியூசிய செயலாளர் நந்தாராவ், சிறப்புரை: எத்தியோப்பிய பேராசிரியர் சேனாபதி, காலை 10:30 மணி.
கண்காட்சி
* பர்னிச்சர்கள் கோடை சிறப்பு தள்ளுபடி விற்பனை: மடீட்சியா ஹால், மதுரை, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.
