ADDED : செப் 01, 2024 03:24 AM
கோயில்
திரிவேணி விழா: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, பகவத் கீதை பாராயணம், காலை 6:00 மணி, பெரியபுராணம் - சிறப்புத் தொடர் விரிவுரை, நிகழ்த்துபவர்: பொள்ளாச்சி தத்துவ ஞான சபைஆச்சாரியர் சுவாமி வேதாந்த ஆனந்த சரஸ்வதி,
காலை 7:00 மணி, மீனாட்சி நாயக்கர் மண்டபம், மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: தலைவர் சுவாமி சிவானந்த சுந்தரானந்த சரஸ்வதி, தொடக்கவுரை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஸ்ரீமதி, சிறப்புரை: எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன், இரவு 7:00 மணி.
கோயில் உற்ஸவம்: காளியம்மன் கோயில், பொன்மேனி, மதுரை, அன்னதானம், காலை 10:00 மணி, மஞ்சள் நீராட்டு விழா, விளக்கு பூஜை, ஏற்பாடு: பொன்மேனி கிழக்குத் தெரு மகளிரணி, மாலை 6:00 மணி.
சர்ச் பெருவிழா: வேளாங்கண்ணி அன்னை சர்ச், அண்ணா நகர், மதுரை, திருப்பலி - பாதிரியார் ஆரோன், காலை 6:30 மணி, நேர்ச்சை பொங்கல் வைத்தல், காலை 8:00 மணி, பாதிரியார் ஜெரோம் எரோனிமுஸ்ஸின் புதுநன்மைத் திருப்பலி, காலை 11:00 மணி, சூவென்ஸ்டாட் அருட்தந்தையர்களின் திருப்பலி, மாலை 6:00 மணி.
ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.
பக்தி சொற்பொழிவு
பிரபஞ்ச ரகசியம்: நிகழ்த்துபவர் - ஜோதி சண்முகம், மதுரைத் திருவள்ளுர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
ஸ்ரீமத் பாகவதம்: நிகழ்த்துபவர் - சனத்குமார் பாகவதர், நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, மாலை 6:00 மணி.
அத்வைதானந்தர் ஜெயந்தி சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - குணார்னவானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ்லைன், மதுரை, இரவு 7:00 மணி.
பள்ளி, கல்லுாரி
17 - 22 வயது பெண்களுக்கு இலவச கபடி பயிற்சி: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லுாரி, உசிலம்பட்டி, பயிற்சி அளிப்பவர்: தலைவர் அலெக்ஸ் பாண்டியன், ஏற்பாடு: சதர்ன் ஸ்போர்ட்ஸ் அகாடமி, காலை 8:30 மணி முதல்.
பொது
தினமலர் நாளிதழ் நடத்தும் பள்ளிக் குழந்தைகள், அம்மாக்களுக்கான கண், மனநலம் காப்பது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, பசுமலை, மதுரை, கருத்துரை வழங்குவோர்: ஸ்ரீராம் சந்திரா கிளினிக் கண் சிறப்பு டாக்டர் சீனிவாசன், ஹர்ஷா மருத்துவமனை மனநல டாக்டர் சிவசங்கரி, எம்.எஸ்.,செல்லமுத்து அறக்கட்டளை ஆராய்ச்சி இயக்குநர் கண்ணன், காலை 10:30 முதல் மதியம் 12:30 மணி வரை.
மாநில பொதுக்குழு, மாவட்ட மாநாட்டில் தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர். லட்சுமிபதிக்கு 'விப்ர ரத்னா' விருது வழங்கல்: பிராமண கல்யாண மஹால், எஸ்.எஸ்.காலனி, மதுரை, தலைமை: தலைவர் ஹரிஹர முத்து அய்யர், ஏற்பாடு: தமிழ்நாடு பிராமண சமாஜம், காலை 9:00 மணி.
எழுத்தாளர் மகேந்திரபாபு எழுதிய வெற்றிக் கதவின் திறவுகோல், பால்யம் என்றொரு பருவம்- நுால்கள் வெளியீடு: எம்.எஸ்.வி. மகால், பாண்டிகோவில், மதுரை, தலைமை: எழுத்தாளர் சோ.தர்மன், மாலை 5:00 மணி.
மிருதங்க வித்வான் ராமசாமி அய்யங்காரின் குருபூஜை விழா மற்றும் இசை அஞ்சலி: தருமை ஆதீனம் சொக்கநாதர் திருமண மண்டபம், வடக்குமாசி வீதி, மதுரை, காலை 9:30 மணி.
வையை - 4ம் ஆண்டு விதைத் திருவிழா, தில்லை நாயகத்துடன் உணவுத் திருவிழா: மதுரன் திருமண மண்டபம், கீழடி(பசியாபுரம்), தலைமை: கீழடி ஊராட்சி தலைவர் வெங்கட சுப்ரமணியன், துவக்கி வைப்பவர்: சிவகங்கை அரசு மருத்துவமனை டாக்டர் சரோஜினி, முளைப்பாரி ஊர்வலம், காலை 7:00 மணி, விழா மலரை வெளியிட்டு சிறப்புரை: வெங்கடேசன் எம்.பி., காலை 9:00 மணி.
தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம்: ஐஸ்வர்யம் மகால், ஆனையூர், மதுரை, தலைமை: அமைச்சர் மூர்த்தி, காலை 10:00 மணி.
மருத்துவம்
இலவச கண் மருத்துவ முகாம்: பா.ஜ., அலுவலகம், காமராஜர் ரோடு, மதுரை, துவக்கி வைப்பவர்: பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஏ.ஆர். மஹாலட்சுமி, ஏற்பாடு: வாசன் கண் மருத்துவமனை, காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
கண்காட்சி
மதுரை பில்டு எக்ஸ்போ 2024 - கட்டுமான பொருட்கள் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா, காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை.