sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை.

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை.

இன்றைய நிகழ்ச்சி: மதுரை.

இன்றைய நிகழ்ச்சி: மதுரை.


ADDED : செப் 07, 2024 05:44 AM

Google News

ADDED : செப் 07, 2024 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

* ஆவணி மூலத் திருவிழா 3ம் நாள் - மாணிக்கம் விற்ற திருவிளையாடல்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, கீழ ஆவணிமூல வீதி, தெற்காவணிமூல வீதி, காசுக்கார செட்டியார்கள் மண்டபம், கான்சாமேட்டுத் தெரு, தெற்குமாசி வீதி, பாண்டிய வேளாளர் தெரு, தெற்குவெளி வீதி வழியாக ஒண்டிமுத்துப்பிள்ளை மண்டபம் வரை தங்கச்சப்பரத்தில் சுவாமி, அம்மன் புறப்பாடு, காலை 9:00 மணி, பாண்டிய வேளாளர் தெரு, மேலமாசி வீதி, நேதாஜி ரோடு, ஆவணிமூல வீதிகள் வழியாக கோயிலுக்கு வரை சுவாமி கைலாசபர்வத வாகனத்திலும், அம்மன் காமதேனு வாகனத்திலும் புறப்பாடு, இரவு 7:00 மணி.

* கும்பாபிஷேகம் - முதல்கால யாகசாலை பூஜை: மாரியம்மன், சித்தி விநாயகர் கோயில், கோரிப்பாளையம், மதுரை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி, பூர்ணாஹுதி, யாகசாலை பூஜை நடத்துபவர்: ராஜா பட்டர், மாலை 5:00 மணி.

* திரிவேணி விழா: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, பகவத் கீதை பாராயணம், காலை 6:00 மணி, பெரிய புராணம் - விரிவுரை, நிகழ்த்துபவர்: பொள்ளாச்சி தத்துவ ஞான சபை ஆச்சாரியர் சுவாமி வேதாந்த ஆனந்த சரஸ்வதி, காலை 7:00 மணி, தலைமை: தலைவர் சுவாமி சிவானந்த சுந்தரானந்த சரஸ்வதி, தொடக்கவுரை: விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் நிர்வாக இயக்குனர் சங்கர சீத்தாராமன், சிறப்பு பட்டிமன்றம்: நடுவர் - பேராசிரியர் சாலமன் பாப்பையா, மாலை 6:00 மணி.

* சர்ச் பெருவிழா: வேளாங்கண்ணி அன்னை சர்ச், அண்ணா நகர், மதுரை, திருப்பலி - பாதிரியார் ஜார்ஜ் ஆரோக்கியம், காலை 11:30 மணி, பாதிரியார்கள் ஜான் திரவியம், இன்னாசி அற்புதராஜ், மாலை 6:00 மணி.

விநாயகர் சதுர்த்தி

* செல்வ விநாயகர் கோயில், தபால்தந்தி நகர், மதுரை, ஹோமம், அபிஷேகம், அலங்காரம், காலை 7:00 மணி, சிறப்பு பூஜை, அன்னதானத்தை துவக்கி வைப்பவர்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஸ்ரீமதி, இரவு 7:00 மணி.

* சங்க விநாயகர் கோயில், வில்லாபுரம், மதுரை, திருப்புகழ் பஜனை, காலை 6:00 மணி, அபிஷேகம், ஆராதனை, காலை 9:00 மணி, வில்லாபுரம் மீனாட்சி நகர் முக்கிய வீதிகளில் தேரோட்டம், மாலை 6:00 மணி, மகா தீபாராதனை, ஏற்பாடு: ஆன்மிக சேவா சங்கம், இரவு 9:00 மணி.

* ஆனந்த விநாயகர் கோயில், ஆனந்த நகர், மதுரை, விக்னேஸ்வர பூஜை வேத பாராயணம், காலை 7:00 மணி, கணபதி ஹோமம், காலை 8:00 மணி, அபிஷேகம், அலங்காரம், காலை 9:00 மணி, மகா தீபாராதனை, காலை 10:35 மணி.

* செல்வ விநாயகர் கோயில், புது வசந்தம் 2வது தெரு, மதுரை, வருடாபிஷேகம் - கணபதி ஹோமம், காலை 8:00 மணி.

* யோக விநாயகர் கோயில், முத்துபட்டி, மதுரை, கணபதி ஹோமம், அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி.

* சித்தி விநாயகர் கோயில், ரமணஸ்ரீ கார்டன், ஜீவா நகர், மதுரை, கணபதி ஹோமம், காலை 6:00 மணி, அபிஷேகம், காலை 7:00 மணி, சிறப்பு தீபாராதனை: காலை 8:30 மணி, 1008 சகஸ்ரநாம அர்ச்சனை, மாலை 5:00 மணி, விநாயகர் வீதி உலா, மாலை 6:00 மணி.

* சடாச்சர முருகன் கோயில், பசியாபுரம், சிலைமான், கணபதி ஹோமம், அபிஷேகம், ஆராதனை, காலை 9:00 மணி.

* அரசரடி, ஒத்தகடையில் சிறப்பு யாகம் நடத்தி விநாயகர் பிரதிஷ்டை: செய்பவர் - பா.ஜ., மருத்துவ அணி மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணி, ஏற்பாடு: ஹிந்து முன்னணி, காலை 4:00 மணி, விநாயகர் வீதி உலா, மாலை 4:00 மணி, பிரசாதம் வழங்குதல், மாலை 6:00 மணி.

* கன்னிமாரியம்மன் கோயில் தெரு, மதுரை, சிறப்பு பூஜை, தலைமை: பா.ஜ., மாவட்ட துணைத் தலைவர் ஜோதி மணிவண்ணன், காலை 10:00 மணி, சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஹிந்து எழுச்சி ஊர்வலம், ஏற்பாடு: ஹிந்து முன்னணி, மதியம் 12:00 மணி.

பக்தி சொற்பொழிவு

* பகவத் கீதை : நிகழ்த்துபவர் - சுவாமி நித்யதீபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி, விநாயகர் அகவல் பாராயணம், சிறப்பு பஜனை, இரவு 7:00 மணி.

* தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* விநாயகர் அகவல்: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி, சிறப்பு வழிபாடு, இரவு 8:00 மணி.

பள்ளி, கல்லுாரி

* அகண்ட நாம ஜெபம் - விநாயகர் வழிபாடு: விவேகானந்த கல்லுாரி, திருவேடகம், தலைமை: முதல்வர் வெங்கடேசன், ஆசி வழங்குவோர்: செயலாளர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மானந்தா, அதிகாலை 4:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை.

பொது

* சாந்தாஸ் சில்க்ஸ் - புதிய பட்டு மாளிகை திறப்பு விழா: கே.கே.நகர் ஆர்ச் அருகில், மதுரை, தலைமை: அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, திறந்து வைப்பவர்: அருப்புக்கோட்டை ஜெயவிலாஸ் கோவிந்தராஜ் மில்ஸ் வரதராஜ், முதல் விற்பனையை துவக்கி வைப்போர்: மதுரை ஜெயவிலாஸ் பாபு, அருப்புக்கோட்டை ஜெயவிலாஸ் கார்த்திகேயன், பெறுபவர்: டாக்டர் சுஜாதா சங்குமணி, பங்கேற்பு: தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் கடம்பூர் ராஜூ, தளபதி, மேயர் இந்திராணி பொன்வசந்த், ஏற்பாடு: ஜெயபிரபா ஜூவல்லர்ஸ் குழுமம் பிரபாகரன், காலை 10:45 மணி.

* புத்தகத் திருவிழா: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை, பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி, மாலை 4:00 மணி, தலைமை: கலெக்டர் சங்கீதா, சிறப்புரை: ஓய்வுபெற்ற தலைமை செயலர் இறையன்பு, ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், பொது நுாலக இயக்கம், பபாசி, மாலை 6:00 மணி.

* இறையன்பு விருது வழங்கும் விழா, ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா: இறையன்பு நுாலக வளாகம், பகத்சிங் தெரு, திருமங்கலம், தலைமை: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி உதவித் தலைவர் ஜெயராமன், சிறப்புரை: பி.கே.என்.,பள்ளி ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் பழனிராஜ், விருது பெறுபவர்கள்: கவிஞர் ரவி, திருமங்கலம் இலக்கியப் பேரவை செயலாளர் சங்கரன், காலை 9:30 மணி.

கண்காட்சி

* வண்ண மீன்கள் கண்காட்சி, வீட்டு உபயோகப் பொருட்காட்சி: காந்தி மியூசிய மைதானம், மதுரை, காலை 11:00 முதல் இரவு 9:30 மணி வரை.






      Dinamalar
      Follow us