ADDED : மார் 27, 2024 07:12 AM
கோயில்
பங்குனி திருவிழா- - அம்மன் புறப்பாடு: மந்தை பகவதியம்மன் கோயில், மங்களாம்பட்டி, காலை 10:30 மணி.
பங்குனி உற்ஸவம்: செல்வ விநாயகர், முத்தாலம்மன், அய்யனார் கோயில், சின்னப்பட்டி, கிடாய் வெட்டுதல், காலை 6:00 மணி முதல்.
பக்தி சொற்பொழிவு
திருவருட்பா: நிகழ்த்துபவர் - மு.விஜயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
நாராயணீயம் பாராயணம்: நிகழ்த்துவோர் - ஆசிரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, மாலை 6:00 மணி.
பள்ளி, கல்லுாரி
நுால் அறிமுகம், புதினத் திறனாய்வு: செந்தமிழ்க் கல்லுாரி, மதுரை, தலைமை: இணைப் பேராசிரியர் வேணுகா, ஏற்பாடு: பாண்டியன் நுாலக வாசகர் வட்டம், மதியம் 2:00 மணி.
டி.ஆர்.பி., நெட், செட் தேர்வு வெற்றிக்கான வழிகள் - கருத்தரங்கு: யாதவர் கல்லுாரி, மதுரை, சிறப்புரை: பார்க் பிளாசா குழும நிறுவனர் நவநீதகிருஷ்ணன், கருத்துரை: காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி கணிதவியல் துறை உதவிப் பேராசிரியர் பாலசுந்தர், ஏற்பாடு: கணிதவியல் துறை, காலை 10:30 மணி.
முதியோர் குறித்த தேசிய கருத்தரங்கு: மதுரை சமூக அறிவியல் கல்லுாரி, தலைமை: முதல்வர் ஜெயக்குமார், விருந்தினர்: கிரேஸ் கென்னட் பவுண்டேஷன் சி.இ.ஓ., அகஸ்டஸ் சாமுவேல், காலை 10:30 மணி.
பணி நிறைவு பாராட்டு விழா: சவுராஷ்டிரா இருபாலர் மேல்நிலைப்பள்ளி, மதுரை, தலைமை: தாளாளர் ஜெகந்நாத், பாராட்டு பெறுபவர்: கைத்தொழில் ஆசிரியர் குமரன், ஏற்பாடு: ஆசிரியர் - அலுவலர் சங்கம், மதியம் 12:15 மணி.
