sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்; மார்ச் 9

/

இன்றைய நிகழ்ச்சிகள்; மார்ச் 9

இன்றைய நிகழ்ச்சிகள்; மார்ச் 9

இன்றைய நிகழ்ச்சிகள்; மார்ச் 9


ADDED : மார் 09, 2025 03:54 AM

Google News

ADDED : மார் 09, 2025 03:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

மாசி மண்டல உற்ஸவம் -7ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மனும், சுவாமியும் மரச் சப்பரத்தில் கீழச்சித்திரை, தெற்காவணி வீதிகள் உலா, ஆயிர வைசிய காசுக்கார செட்டியார் மண்டபத்திற்கு புறப்பாடு, காலை 7:00 மணி, அம்மன் யாளி வாகனத்திலும், சுவாமி நந்திகேசுவரர் வாகனத்திலும், மேல, கீழச்செட்டி, சொக்கப்பன் நாயக்கர் தெரு, சித்திரை வீதிகள் உலா வந்து கோயில் சேருதல், இரவு 7:00 மணி.

பங்குனிப் பெருவிழா -3ம் நாள்: சுப்பிரமணியசுவாமி கோயில், திருப்பரங்குன்றம், தங்கப்பல்லக்கில் வீதி உலா, காலை 10:00 மணி, அன்னவாகனத்தில் வீதி உலா, கோயில் காவேரியா பிள்ளை மண்டபம், இரவு 7:00 மணி.

மாசி மகம் தெப்பத்திருவிழா -8ம் நாள்: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, ஏகாந்த சேவை, மாட வீதி புறப்பாடு, காலை 9:00 மணி, குதிரை வாகனத்தில் ராஜாங்க சேவை மாட வீதி புறப்பாடு, இரவு 7:00 மணி.

மாசி பெருந்திருவிழா -7ம் உற்ஸவ தினம்: இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மதுரை, பிக்சாடணர் புறப்பாடு, காலை 8:45 மணி.

கோயில் உழவாரப்பணி: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, ஏற்பாடு: ஹிந்து கோயில் பாதுகாப்பு இயக்கம், காலை 9:30 மணி.

கும்பாபிஷேகம்: நல்லதங்காள் கோயில், பெரிய இலந்தைகுளம், 2ம் கால யாக பூஜை காலை 7:35 மணி, கும்பாபிஷேகம் காலை 11:00 மணி.

ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.

யஜூர் வேதம், சாம வேதம் பாராயணம், பாலானந்த சுவாமிகள் மடம், திருப்பரங்குன்றம், காலை 8:30மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.

பக்தி சொற்பொழிவு

சத்சங்கம், பஜனை, கீதை பாராயணம்: நிகழ்த்துபவர் -- கிருஷ்ணானந்த சைதன்யா, தெற்வநெறிக் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, இரவு 7:30 மணி.

செல்வச் செவிலி -- இலக்கண குறிப்பு: நிகழ்த்துபவர் -- கணேசன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

பள்ளி, கல்லுாரி

என்.எஸ்.எஸ்., முகாம் - மனநலம் பேணுதல்: சரந்தாங்கி, தலைமை: கல்லுாரி முதல்வர் சிவாஜிகணேசன், ஏற்பாடு: எம்.ஏ.வி.எம்.எம்., ஆயிர வைசியர் கல்லுாரி, காலை 10:00 மணி.

மங்கை மாரத்தான் போட்டி: மங்கையர்கரசி மகளிர் கல்லுாரி, பரவை, துவக்கி வைப்பவர்: கல்லுாரி தலைவர் அசோக்குமார், ஏற்பாடு: மங்கையர்கரசி கல்வி குழுமம், காலை 6:00 மணி.

பொது

மதநல்லிணக்க மாநாடு: ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர் ஹால், கே.கே., நகர், மதுரை, தலைமை: வழக்கறிஞர் வாஞ்சிநாதன், பங்கேற்பு: வி.சி.க., தலைவர் திருமாவளவன், காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, இ.கம்யூ., மாநிலச் செயலாளர் முத்தரசன், ஏற்பாடு: மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு, மாலை 4:00 மணி.

ஜல்லிக்கட்டு போட்டி: கலைஞர் நுாற்றாண்டு அரங்கு, கீழக்கரை, அலங்காநல்லுார், தொடங்கி வைப்பவர்: அமைச்சர் மூர்த்தி, காலை 6:45 மணி.

'சார் பேப்பர்' நாவல் - வெளியீட்டு விழா: மூட்டா அரங்கு, 6, காக்காதோப்பு, மதுரை, தலைமை: பேராசிரியர் பெரியசாமி ராஜா, பங்கேற்பு: எழுத்தாளர்கள் அறிவுமணி, தர்மன், ராமசாமி, மணிமாறன், பேராசிரியர்கள் பூமிச்செல்வம், ரத்தினக்குமார், மாலை 5:00 மணி.

காந்திய சிந்தனை சான்றிதழ் பயிற்சி வகுப்பு: ஆரோ லேப், வீரபாஞ்சான், மதுரை, பங்கேற்பு: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், காலை 9:30 மணி.

உலக கண் நீர் அழுத்த நோய் வாரம் -விழிப்புணர்வு பேரணி: பெரியார் பஸ் ஸ்டாண்ட், மதுரை, தலைமை: டாக்டர் சீனிவாசன், துவக்கிவைப்பவர் : போலீஸ் கமிஷனர் லோகநாதன், ஏற்பாடு: ஸ்ரீராம்சந்திரா கண் மருத்துவமனை, காலை 7:30 மணி.

மகளிர் தின - கருத்தரங்கு: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மியூசியம் இளநிலை உதவியாளர் நித்யா பாய், பங்கேற்பு: யோகா மாணவிகள் ஸ்ரீதேவி, சித்ரா தேவி, முத்து சோலைராணி, ஏற்பாடு: காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம், காலை 10:00 மணி.

சவுராஷ்டிரா மாணவர்களுக்கான டி.என்.பி.எஸ்.சி., மாதிரி தேர்வு: கோவிந்தா தாஸ ஸேவா ஸமாஜம், 25, மகால் 6வது தெரு, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு மஹா சவுராஷ்டிரா சபா, மதியம் 2:00 மணி.

மருத்துவம்

பெண்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை: ஜெயன் மருத்துவமனை, 178, காமராஜர் ரோடு, மதுரை, பங்கேற்பு: டாக்டர்கள் லட்சுமி, இந்துஜா, காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.

பெண்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, 7 ஏ, மருதுபாண்டியர் நகர், நரிமேடு, மதுரை, பங்கேற்பு: டாக்டர் சரவணன், காலை 10:00 மணி முதல்.

கண்காட்சி

மீனாட்சி பேன் ஹவுசின் ஏ.சி., கண்காட்சி, விற்பனை: மதுரா கோட்ஸ் மில் அருகில், நியூ ஜெயில் ரோடு, மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

பட்டு, பனாரஸ், காட்டன் சேலைகள், வேட்டிகள், சட்டைகள், மெத்தை விரிப்புகள், திரைச்சீலைகள் உள்ளிட்டவைகளின் தள்ளுபடி விற்பனை: ஹேண்ட்லுாம் ஹவுஸ், 154, கீழவெளி வீதி, மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.






      Dinamalar
      Follow us