ADDED : ஜூன் 25, 2024 06:08 AM
கோயில்
சங்கடஹர சதுர்த்தி பூஜை: ஸ்ரீ லட்சுமி விநாயகருக்கு அபிேஷகம், அலங்காரம், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மாதாந்திர ஜன்ம நட்சத்திர உற்ஸவம், மாலை 5:30 மணி, காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை.
சங்கடஹர சதுர்த்தி பூஜை: ஆனந்தேஸ்வர விநாயகர் ஆஸ்திக சபா, எல்லீஸ் நகர், மதுரை, மாலை 5:00 மணி.
இடைவிடா சகாய அன்னை சர்ச் பொன்விழா - நவநாள் திருப்பலி: அஞ்சல் நகர், மதுரை, தலைமை: மதுரை உயர்மறைமாவட்ட முதன்மை குரு பாதிரியார் ஜெரோம் எரோணிமுஸ், மாலை 5:45 மணி.
பக்தி சொற்பொழிவு
திருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் - பார்வதியம்மாள், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
பாதுகா பட்டாபிஷேகம் - ராமாயணம்: நிகழ்த்துபவர் - முரளி, மதன கோபால சுவாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, மாலை 6:15 மணி.
பொது
கள்ளச்சாராயம் விவகாரத்தில் தி.மு.க., அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம் முன், மதுரை, தலைமை: நகர் வடக்கு மாவட்ட செயலாளர் பாலச்சந்தர், கண்டன உரை: தொழிற்சங்க பேரவை செயலாளர் காளிராஜன், காலை 10:00 மணி.
அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நிறைவு: மண்டல தலைமை அலுவலகம், பைபாஸ் ரோடு, மதுரை, தலைமை: சங்கத் தலைவர் அழகர்சாமி, முடித்து வைப்பவர்: சி.ஐ.டி.யு., துணைத்தலைவர் ராஜேந்திரன், காலை 10:00 மணி, அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக பணிமனை வளாகம், மேலுார் மெயின் ரோடு, மதுரை, தலைமை: சி.ஐ.டி.யு., மதுரை பணிமனை தலைவர் லட்சுமணப்பெருமாள், முடித்துவைப்பவர்: அரசு போக்குவரத்து சம்மேளன உதவித் தலைவர் பிச்சை, காலை 10:00 மணி.
மக்கள் குறைதீர்க்கும் முகாம்: மண்டல அலுவலகம் - 2, ரோஸ்கோர்ஸ் ரோடு, மதுரை, தலைமை: மேயர் இந்திராணி பொன்வசந்த், காலை 10:00 மணி.
மின்குறை தீர் கூட்டம்: உசிலம்பட்டி மின் அலுவலகம், தலைமை: மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன், காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி.
பள்ளி, கல்லுாரி
முதலாமாண்டு மாணவர்களுக்கான புத்தாக்க நிகழ்வு - இரண்டாம் நாள்: சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, டி.வி.ஆர்., நகர், அருப்புக்கோட்டை ரோடு, மதுரை, காலை 9:30 மணி.
மருத்துவம்
தேர்ச்சி பெற்ற பிளஸ் 2 மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை காண்பித்து இலவச கண் பரிசோதனை செய்துகொள்ளும் முகாம்: ஸ்ரீ ராம்சந்திரா கண் மருத்துவமனை, குட் ஷெட் தெரு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் சீனிவாசன், காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.
கண்காட்சி
அரசுப் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்புத் துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.