ADDED : செப் 17, 2024 05:13 AM
கோயில்
முளைப்பாரித் திருவிழா: மாரியம்மன் கோயில், தல்லாகுளம், மதுரை, மாவிளக்கு, மாலை 4:30 மணி, திருமஞ்சனக் குளத்தில் இருந்து நாட்டாண்மை கரகம் எடுத்து வருதல், முளைப்பாரிகள் அம்மன் சன்னதி முளைத் திண்ணைக்கு வந்து சேர்தல், இரவு 8:00 மணி.
பக்தி சொற்பொழிவு
திருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் - மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
சங்கரர் சரித்திரம்: நிகழ்த்துபவர் - சுந்தரராம தீட்சிதர், மகா பெரியவா கோயில், எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:30 மணி.
பொது
பெரியார் பிறந்தநாள் விழா: அண்ணா பூங்கா சங்கமம் இயற்கை அங்காடி அருகில், திருநகர், மதுரை, தலைமை: திருநகர் மக்கள் மன்றம் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னிலை: தலைவர் செல்லா, பங்கேற்பு: திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாநில துணைப் பொதுச்செயலாளர் வைரமுத்து, ஏற்பாடு: திருநகர் மக்கள் மன்றம், காலை 8:00 மணி.
மூளை ஆய்வக தொழில்நுட்பம் மூலம் மூளையில் உள்ள கட்டியை அகற்றும் நவீன அறுவை சிகிச்சை நுட்பம் துவக்க விழா: ஓட்டல் அமிகா, அவனியாபுரம், மதுரை, பங்கேற்பு: தலைவர் அருண்குமார், நிர்வாக இயக்குநர் கவிதா பென், ஏற்பாடு: ஹன்னா ஜோசப் மருத்துவமனை, காலை 11:30 மணி.
பள்ளி கல்லுாரி
மேம்பட்ட எக்சலுடன் தரவு பகுப்பாய்வு குறித்த கருத்தரங்கு: விவேகானந்த கல்லுாரி, திருவேடகம் மேற்கு, மதுரை, பங்கேற்பு: ஆக்கம் செவன்த் மைண்ட் அகாடமி நிறுவனர் அழகுபாண்டி, ஏற்பாடு: வர்த்தகத் துறை, காலை 9:45 மணி.
கண்காட்சி
புத்தகத் திருவிழா நிறைவு நாள்: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், பபாசி, பொது நுாலக இயக்கம், காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை.
வண்ண மீன்கள் கண்காட்சி, வீட்டு உபயோகப் பொருட்காட்சி: காந்தி மியூசிய மைதானம், மதுரை, மாலை 5:00 முதல் இரவு 9:30 மணி வரை.
மருத்துவம்
உலக இதய தினத்தை முன்னிட்டு இதய மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, மாலை 3:00 மணி முதல் 6:00 மணி வரை.
விளையாட்டு
முதல்வர் கோப்பை பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட விளையாட்டு போட்டிகள்: எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கம், மதுரை, இறகுப்பந்து, கூடைப்பந்து, வளைகோல்பந்து, கபடி, சிலம்பம், நீச்சல், மேசைப்பந்து, கையுந்துபந்து, கைப்பந்து, கேரம், செஸ், காலை 8:00 மணி, திருப்பாலை யாதவா ஆண்கள் கல்லுாரி, கிரிக்கெட், டான் பாஸ்கோ மேனிலைப்பள்ளி, கால்பந்து, ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 8:00 மணி.