நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் சிட்கான் 2024 தொழில் வர்த்தக கண்காட்சி நேற்று(ஆக.,9) மடீட்சியாவில் துவங்கியது.
ஆக.,11 வரை நடக்கும் இக்கண்காட்சியை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார். எம்.எல்.ஏ பூமிநாதன், மாவட்ட தொழில் மைய இணை இயக்குநர் கணேசன் கலந்து கொண்டார். அமைப்பின் தலைவர் மோகன்ராம் உடனிருந்தார். இக்கண்காட்சி தினமும் காலை 9:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடக்கும். வீட்டு உபயோகப் பொருட்கள், குழந்தைகள் விளையாட விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அனுமதி இலவசம்.

