ADDED : ஜூன் 01, 2024 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அரசு அருங்காட்சியகத்தில் பாரம்பரிய விளையாட்டுகள் நடந்தன. காப்பாட்சியர் மருதுபாண்டியன் பங்கேற்றார். பல்லாங்குழி, தாயம், தட்டாங்கல், நொண்டி, கோலிக்குண்டு போன்ற விளையாட்டுகள் நடத்தப்பட்டன.
நுங்கு சாப்பிடும் பயிற்சி, நுங்கு வண்டி ஓட்டுதல், காத்தாடி செய்யும் பயிற்சி நடந்தது. தொல்லியல் அலுவலர் ஆசைத்தம்பி, ஆனந்தி, கூடல் கலைக்கூடத்தின் நிறுவனர் அண்ணாவி அழகுபாரதி, தி ஸ்டாண்டர்டு பயர் ராஜரத்தினம் கல்லுாரியின் தமிழ்த்துறை பேராசிரியர் தனலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.