ADDED : ஜூலை 07, 2026 06:32 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் ஆட்டோ டிரைவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் போக்குவரத்து போலீஸ் சார்பில் நடந்தது.
துணைகமிஷனர் வனிதா தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர்கள் செந்தில்சுரேஷ், செந்தில்குமார், தங்கமணி, கணேஷ்ராம், சோபனா, பஞ்சவர்ணம், பூர்ணகிருஷ்ணன், எஸ்.ஐ.,க்கள் சந்தனகுமார், லிங்க்ஸ்டன், ஆண்டவர், போக்குவரத்து கழக மேலாளர் அசோக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். விபத்தில்லா சாலை, ஓட்டுநர் உரிமத்தின் அவசியம், பயணிகளின் பாதுகாப்பு, வாகனத்தின் உறுதிச்சான்று, வாகன எண்ணின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
