நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் நேர்காணலை எதிர்கொள்வது குறித்த சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. முதல்வர் சந்திரன் துவக்கி வைத்தார்.
நேர் காணலின் போது உடல் மொழி, உரையாடல் முறை, ஆடைகள் அணியும் விதம், கேள்விகளை எதிர்கொள்ளுதல், பதில் அளிக்கும் நுட்பங்கள் குறித்து சென்னை ஐ.எஸ்.எஸ்.எம்., வணிகப்பள்ளி பயிற்சியாளர்கள் மாசென், மோனிஸ்வரன், பவித்ரா, குணசேகரன், சல்வா பயிற்சி அளித்தனர். பேராசிரியர்கள் விஜயகுமார், சுப்பிரமணியன், கோபாலசுந்தர், ஜெயஜோதி ஒருங்கிணைத்தனர்.

