ADDED : ஜூலை 23, 2024 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி வட்டார வேளாண் துறை தொழில்நுட்ப முகமை திட்டத்தின் கீழ் சேக்கிபட்டியில் நடந்த பயிற்சி முகாமில் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
மதுரை வேளாண்மை ஆராய்ச்சி நிலைய ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், கொட்டாம்பட்டி வேளாண் உதவி இயக்குநர் சுபாசாந்தி, பயிர் காப்பீடு அலுவலர் பிரவீன் உள்ளிட்டோர் பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களில் சொட்டு நீர் பாசன முறைகள் குறித்து விளக்கினர். தவிர காட்டுப்பன்றி, காட்டுமாடு பிரச்சனையில் இருந்து பயிர்களை காப்பது குறித்தும், மத்திய, மாநில அரசு திட்டங்கள் குறித்தும் பேசினர். தொழில்நுட்ப மேலாளர் ராஜதுரை, உதவி வேளாண் அலுவலர் பாலசுப்பிரமணியன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கண்ணன், சத்திய கீர்த்தனா பங்கேற்றனர்.