ADDED : மே 11, 2026 07:11 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு, மத்திய அரசின் புதுமையாக்கம் பிரிவு சார்பில் தொழில் முனைவோர், மாணவர் மேம்பாட்டிற்கான முகாம் துவக்க விழா நடந்தது.
மேலாளர் ஆனந்த் செல்வராஜ், விவசாயம், ஊரக வளர்ச்சி வங்கி பொது மேலாளர் சக்திபாலன், கல்லுாரி கணினி துறை தலைவர் ஷாலினி துவக்கி வைத்தனர். பல்வேறு கல்லுாரிகளில் இருந்து 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். புதிய வாய்ப்புகளை கண்டறிதல், அவற்றில் உள்ள பிரச்சனைகள், தீர்வு காணுதல் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. டீன் ஹரிஹரன், பேராசிரியர் கார்த்திகா ஒருங்கிணைத்தனர்.
