ADDED : ஆக 26, 2024 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்ட போட்டி தேர்வுக்கான ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல் பயிற்சி வகுப்பு நடந்தது.
வட்டார கல்வி அலுவலர் ஷாஜகான் தலைமை வகித்தார். கருணை உள்ளங்கள் பவுண்டேஷன் செயலாளர் விஸ்வநாத தாசன் முன்னிலை வகித்தார்.
வட்டார கல்வி அலுவலர் அகிலத்து இளவரசி துவக்கி வைத்தார். தென்காசி ஆசிரியர் பிரபாகரன் பயிற்சி அளித்தார். நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
ஆசிரியர் பிரேம்குமார் நன்றி கூறினார்.

