ADDED : ஏப் 28, 2024 03:36 AM
வாடிப்பட்டி :  வாடிப்பட்டி ஒன்றியத்தில் மதுரை வேளாண் கல்லுாரி மாணவிகள் மற்றும் காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண் கல்லுாரி மாணவிகள் 'கிராம தங்கல்' திட்டத்தின் கீழ் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். வேளாண் உதவி இயக்குனர் பாண்டி, வேளாண் அலுவலர் சத்தியவாணி தலைமையில் எஸ்.எஸ்., மண்புழு உர தொழிற்சாலைக்கு சென்றனர். மண்புழு உரம், வளப்படுத்தப்பட்ட மண்புழு உரம், சூப்பர் கலவை, தொழு உரம், ஆட்டு எரு,மீன் அமிலம், பஞ்சகாவ்யா மற்றும் ஜீவாமிர்தம் தயாரித்தல் மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து செயல் முறை விளக்கம் அளித்தனர். மேலும் கோகோ பீட் மற்றும் குரோ பேகின் பயன்கள் குறித்தும் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
காரைக்குடி கல்லுாரியின் 4ம் ஆண்டு மாணவர்கள் சந்திர மோகன் லோகநாதன், தீபன், குரூபிரசாத், சிவகுமார், யோகேஷ், கமலேஸ்வரன். மதுரை இசலாணியில் உள்ள லியோ வேளாண் அறிவியல் தொழில்நுட்பத்திற்கு பேராசிரியர் வரதன் தலைமையில் சென்றனர்.அனைத்து வகையான நுண்ணுாட்டச்சத்துகள் மற்றும் உயிர்ப் பொருட்களை உற்பத்தி செய்யும் முறைகளை அறிந்து கொண்டனர்.

