ADDED : மே 15, 2024 06:06 AM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி: தாலுகா அலுவலகத்தில் வட்ட வழங்கல் துறை சார்பில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு பயோ மெட்ரிக் கருவி குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது.
வட்ட வழங்கல் அலுவலர் ராஜ்குமார் தலைமை வகித்தார். கூட்டுறவு சார்பதிவாளர்கள் வினோத், ரவிக்குமார் முன்னிலை வகித்தனர். தொழில்நுட்ப பொறியாளர் மார்ட்டின் வரவேற்றார். கருப்புசாமி பயிற்சியளித்தார். தாலுகாவிற்கு உட்பட்ட 93 ரேஷன் கடை பணியாளர்கள் பயிற்சி பெற்றனர். ஆர்.ஐ., ராஜ்குமார் நன்றி கூறினார்.
