ADDED : ஜூலை 03, 2024 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறையின் மூலம் காடனேரியில் கிராம வேளாண் முன்னேற்றக் குழுவிற்கான கரீப்பருவ விவசாயிகள் பயிற்சி நடந்தது.
டி.கல்லுப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் விமலா தலைமை வகித்தார். கரீப் பருவத்திற்கு ஏற்ற பயிர் ரகங்கள் தேர்வு, விதை நேர்த்தி அவசியம், ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து உதவி வேளாண் அலுவலர் மலர்கொடி பேசினார்.