ADDED : ஜூலை 13, 2024 04:54 AM
வாடிப்பட்டி : வாடிப்பட்டி வட்டார வேளாண் துறை சார்பில் அரசு அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் குட்லாடம்பட்டியில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது. உதவி இயக்குனர் பாண்டி வேளாண்துறையில் செயல்படுத்தப்படும் மத்திய, மாநில அரசின் திட்டங்கள், சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார்.
வேளாண் அலுவலர் (ஓய்வு) மகாராஜன் பயிர்களில் விதை நேர்த்தி முதல் அறுவடை வரை உள்ள தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார். வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள இடுப்பொருட்கள் குறித்து அலுவலர் பெருமாள் தெரிவித்தார். உதவி வேளாண் அலுவலர் பாண்டியராஜன் துவரை ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரியா உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் பூமிநாதன்,அருணா தேவி பங்கேற்றனர்
