ADDED : மார் 09, 2025 03:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் சென்னை போலீஸ் பயிற்சி பள்ளி எஸ்.பி., மகேஸ்வரி தலைமையில் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. டி.ஜி.பி., சந்தீப்ராய் ரத்தோர் வழிகாட்டுதல்படி பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் குற்றங்களை தடுக்கவும், வன்முறைகளை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தவும் வகையில் சில அறிவுரைகள் வழங்கப்பட்டன. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாள பெண் அதிகாரிகள், போலீசாருக்கு பயிற்சி வழங்கப்பட்டது.