ADDED : மார் 25, 2024 06:14 AM
மதுரை, : மதுரையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், ஓட்டுச்சாவடியில் பணியாற்றும் அலுவலர்களுக்கான பயிற்சிகள் நேற்று துவங்கின. பத்து சட்டசபை தொகுதியிலும் 1400 பேர் வீதம் மொத்தம் 14 ஆயிரம் பேர் வரை பங்கேற்றனர்.
திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லுாரியில் கலெக்டர் சங்கீதா பார்வையிட்டார். இரண்டாம் கட்ட பயிற்சி ஏப்.,7 மற்றும் மூன்றாம் கட்ட பயிற்சி ஏப்.,18ல் நடக்கிறது.
திருப்பரங்குன்றம்
மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் நடந்த முகாமை திருப்பரங்குன்றம் தேர்தல் உதவி அலுவலர் ரவிக்குமார், கூடுதல் அலுவலர் சேதுராமன் துவக்கி வைத்தனர். தாசில்தார்கள் அனீஸ் சத்தார், சரவணன், தேர்தல் துணை தாசில்தார்கள் பாலகுமார், வீரமணி, கவுரி கலந்து கொண்டனர்.
உசிலம்பட்டி
டி.இ.எல்.சி., பெண்கள் பள்ளியில் நடந்த பயிற்சி முகாமை கலெக்டர்கள் மதுரை சங்கீதா, தேனி ஷஜிவனா, ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன், தாசில்தார் சுரேஷ்பிரடரிக்கிளமண்ட், வட்டார கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

