ADDED : செப் 11, 2024 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் நகராட்சி 19வது வார்டு கொடிமரத் தெருவில் சிறிய டிரான்ஸ்பார்மர் உள்ளது. நேற்று அதிகாலை 5:30 மணிக்கு அந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து குண்டு வெடிப்பது போல் பயங்கர சத்தம் கேட்டது.
அதேநேரம் தீப்பொறியும் கிளம்பியது. உடனே அந்தப் பகுதியில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து வெடித்ததால் சில வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன.
உடனே மின்வாரிய ஊழியர்கள் அந்த டிரான்ஸ்பார்மரை சீரமைத்தனர்.

