/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாணவர்கள் புத்தகம் படிக்க வேண்டும் திருநங்கை பிரியா பாபு அறிவுரை
/
மாணவர்கள் புத்தகம் படிக்க வேண்டும் திருநங்கை பிரியா பாபு அறிவுரை
மாணவர்கள் புத்தகம் படிக்க வேண்டும் திருநங்கை பிரியா பாபு அறிவுரை
மாணவர்கள் புத்தகம் படிக்க வேண்டும் திருநங்கை பிரியா பாபு அறிவுரை
ADDED : பிப் 24, 2025 03:41 AM
மதுரை: ''வாசிப்பு நம்மை மேம்படுத்தும் என்பதால் மாணவர்கள் கல்லுாரி புத்தகத்துடன் நாளிதழ்கள், பொது அறிவு புத்தகங்களையும் படிக்க வேண்டும்'' என்று திருநங்கை வளமைய நிறுவனர் பிரியா பாபு கல்லுாரி கருத்தரங்கில் பேசினார்.மதுரை தியாகராஜர் கல்லுாரியில் யங் இந்தியன்ஸ், பாரத் ரைசிங், இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் பாலின புரிதல், சமூக கட்டமைப்பு உருவாக்குதல் குறித்த கருத்தரங்கு நடந்தது.
இதில் பிரியா பாபு பேசியதாவது: நமக்கு பாலினம் குறித்த புரிதல் முக்கியமனது., பெண், ஆண் என்ற வேறுபாடு குழந்தை பருவத்தில் தொடங்குகிறது. பெண்களுக்கு டிசைனர் துணிகள், அழகு சாதன பொருட்கள் எனவும், ஆண்களுக்கு கார், வீடியோ கேம் எனவும் பிரித்து பரிசளிப்பது தொடங்கி நிறைய உள்ளன. அவற்றில் மாற்றம் வேண்டும்.
3ம் வகுப்பு புத்தகத்தில் அம்மா அடுப்படியிலும், அப்பா அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பதும், பெண் குழந்தை வீட்டை சுத்தம் செய்வது, ஆண் குழந்தை விளையாடுவது என்ற கருத்துகளில் மாற்றம் வேண்டும். ஆண்கள் நிறைய பேர் சமையல் கலைஞராக உள்ளனர். ஆனால் இன்றும் சிலர் வீட்டில் சிறு வேலையும் செய்வதில்லை. சினிமா, விளம்பரங்களில் பல வகையில் பாலின வேறுபாடு காட்சிப் படுத்தப்படுகிறது.. அதை ரசிக்கிறோம். அதில் உள்ளார்ந்த விஷயங்களை பார்க்க தொடங்கினால் வேறுபாட்டினை களையலாம். கல்லுாரி புத்தகத்தோடு, பொது அறிவு புத்தகம் , நாளிதழ்கள் படிக்க வேண்டும். வாசிப்பு அறிவை தெளிவாக்கும். அனைத்து துறையிலும் திருநங்கைகள் உள்ளனர். பெண்கள் கலாசார, பண்பாடு என்ற கட்டுப்பாடுடன் வளர்வதால் திருநம்பி என்ற உணர்வு இருந்தும் நிறைய பேர் வெளியில் சொல்ல தயங்குகின்றனர் என்றார். சுபா, நரேந்திரன் ஒருங்கிணைத்தார்கள்.

