/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருநங்கையர் படைப்புகள் அதிகம் வெளிவர வேண்டும்
/
திருநங்கையர் படைப்புகள் அதிகம் வெளிவர வேண்டும்
ADDED : ஜூலை 01, 2024 04:51 AM

மதுரை, 'திருநங்கை, திருநம்பிகள் பற்றிய படைப்புகள் தமிழில் அதிகம் வெளிவர வேண்டும்' என மதுரையில் நடந்த 'வண்ணங்கள் - 1000' நிகழ்ச்சியில் பேசினர்.
திருநங்கையர், திருநம்பியர் ஆவண மையம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு நிறுவனர் பிரியாபாபு தலைமை வகித்தார். செயலாளர் மகாலட்சுமி தொகுத்து வழங்கினார். சு. சமுத்திரம் நினைவு சிறுகதை போட்டி பரிசளிப்பு நடந்தது. சிவகாமசுந்தரி நாகமணி எழுதிய 'காகிதப்பூ வாசம்' முதல் பரிசு, அனந்த் ரவியின் 'எழுத்துப்பிழை' 2ம் பரிசு, பட்டுக்கோட்டை ராஜாவின் 'பிருகண்ணளை' 3ம் பரிசை வென்றன.
மகரிஷி வித்யா மந்திர் பள்ளித் தலைமை ஆசிரியர் ஹேமா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில துணைச் செயலாளர் மணிமாறன், மை மதுரை மாண்டிசோரி பள்ளிகள் நிறுவனர் கீதா, மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரி பேராசிரியர் கவிதா, எழுத்தாளர்கள் செந்தில் நாகையாசாமி, தீபா நாகராணி பேசியதாவது:
இக்கால தலைமுறையினருக்கு வாழ்க்கை பற்றிய புரிதல் இல்லை. அவர்களுக்கு தன்னம்பிக்கை குறித்த வார்த்தைகள், வெற்றி பெற்ற மனிதர்களின் முகங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.
வாழ்க்கையில் வென்ற திருநங்கையர், திருநம்பியர் பற்றிய படைப்புகள் தமிழில் அதிகம் வெளிவர வேண்டும். இவ்வாறு பேசினர். மகாலட்சுமி ராகவன் எழுதிய 'டிரான்ஸ்ஜெண்டர் டீமிஸ்டிபைடு' எனும் கேள்வி பதில் புத்தகம் வெளியிடப்பட்டது. உறுப்பினர் வீணா யாழினி நன்றி கூறினார்.