/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போக்குவரத்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
/
போக்குவரத்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 05, 2024 05:15 AM

மதுரை: அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் நேற்று கோட்ட அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம், வாயிற் கூட்டம் நடத்தினர்.
104 மாத அகவிலைப் படி உயர்வை வழங்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்புகளை முறையாக அமல்படுத்த வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நலஅமைப்பின் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். திண்டுக்கல் மண்டல தலைவர் ஜெயபாண்டி முன்னிலை வகித்தார்.
திண்டுக்கல் பொதுச் செயலாளர் ஜேம்ஸ் கஸ்பார் துவக்கி வைத்தார். மாநில தலைவர் கிருஷ்ணன், துணைப் பொதுச் செயலாளர் தேவராஜ், பொருளாளர்கள் கவுரிநாதன், ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.