ADDED : ஆக 26, 2024 06:59 AM
மதுரை: மதுரையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து எச்.எம்.எஸ்., தொழிலாளர் சங்கம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது.
சங்கத் தலைவர் ரவி தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் கண்ணன், ஒச்சாத்தேவன், செயலாளர் வீரப்பெருமாள், ஆலோசகர்கள் குணசீலன், சவுந்தரராஜ், சேதுராமன் முன்னிலை வகித்தனர். செய்தி தொடர்பாளர் அங்குசாமி வரவேற்றார். பொதுச் செயலாளர் ஷாஜஹான் கூட்ட நோக்கத்தையும், தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்தும் பேசினார்.
ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் 90 ஆயிரம் ஓய்வு பெற்ற தொழிலாளர்களை கண்டுகொள்ளாத நிர்வாகத்தையும், தொழிற்சங்க உரிமைகளை மறுக்கும் தமிழக அரசையும், முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைத்து தீர்வு காணாமல் அறிவிப்புகளை மட்டும் வெளியிட முயற்சிக்கும் மண்டல நிர்வாக இயக்குனர்களையும் கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

