ADDED : ஜூன் 06, 2026 06:52 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் நடந்த உலக சுற்றுச்சூழல் தின விழாவில் முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார்.
தலைவர் விஜயராகவன், கவுரவ தலைவர் ராஜகோபால், செயலாளர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தனர். சுயநிதிப் பிரிவு இயக்குநர் பிரபு, மாணவர்கள் நலன் முதன்மையர் அழகேசன், மாணவர் நலன் விரிவாக்க செயல்பாட்டு திறன் முதன்மையர் சிலம்பரசன் பேசினர். கல்லுாரி வளாகத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஹரிவிஷ்ணு ஒருங்கிணைத்தார்.
