ADDED : ஆக 02, 2026 08:00 PM
அ நிறம் | அளவு
மதுரை, ஆக. 3 –
ஒத்தக்கடை அரசு பூங்காவில் உலக நட்பு தினத்தை முன்னிட்டு யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா, தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடந்தது.
மூத்த உறுப்பினர் ஜெயபாலன் முன்னிலை வகித்தார். தமிழாசிரியர் கார்த்திக் வரவேற்றார். உறுப்பினர் பாலமுருகன் நட்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார். குழந்தை நலினா கைகளால் வேப்ப மரக்கன்றுகள் நடப்பட்டன.
மாணவன் ரூபன் நன்றி கூறினார். பவுண்டேஷன் உறுப்பினர்கள் ஸ்டெல்லா மேரி, தமிழ் இலக்கியா, பாரதி, செழியன் பரிதி, உட்பட பலர் பங்கேற்றனர்.
