ADDED : மே 31, 2024 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : மதுரை கே.புதுார் சுதாகரன், மதுரை பங்கஜம் காலனி சந்திரசேகர் 66, இருவரும் காரில் மதுரையிலிருந்து நெல் வாங்குவதற்காக பேரையூர் வந்தனர்.
நேற்று மதியம் மதுரை திரும்புவதற்காக காரை சுதாகரன் ஓட்டினார். டி.கல்லுப்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே ரோட்டு ஓரத்தில் நின்றிருந்த லாரி மீது கார் மோதியது. இதில் சந்திரசேகர் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.