நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : சோழவந்தானில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், பயிலகம் திறப்பு விழா நடந்தது.
நகர் தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். செயலாளர் பாண்டி மாணிக்கம், பொருளாளர் பிரவீன்குமார் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் பாலா வரவேற்றார். மதுரை வடக்கு மாவட்ட தலைவர் கல்லணை, பள்ளி மாணவர்கள் மாலை நேரத்தில் படிப்பதற்கு பயிலகத்தை திறந்து வைத்தார். நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சோழவந்தான் பகுதி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.