ADDED : மே 10, 2026 08:41 PM
அ நிறம் | அளவு
மதுரை: த.வெ.க., தலைவர் விஜய் தமிழக முதல்வராக பதவி ஏற்றதை தொடர்ந்து அக்கட்சியினர் மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே இனிப்பு வழங்கி கொண்டாடினர். மதுரை மத்திய தொகுதி 52வது வார்டு நிர்வாகி ராஜாராம் தலைமையில் நிர்வாகிகள் வெற்றி, மலர் உட்பட பலர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
* வாடிப்பட்டி பஸ்ஸ்டாண்ட் அருகே சுற்றுச்சூழல் அமைப்பாளர் நந்தகோபால், விவசாய அணி அமைப்பாளர் சாந்தகுமார் பேரூர் நிர்வாகிகள் நவீன், திருப்பதி, பொன்குமார், அம்பேத்கர் பங்கேற்றனர். பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். காங்., கம்யூ கட்சி நிர்வாகிகள் ஜீவா, செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தனர்.
