sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ரூ.1 லட்சம் லஞ்சம் இரு அதிகாரிகள் கைது

/

ரூ.1 லட்சம் லஞ்சம் இரு அதிகாரிகள் கைது

ரூ.1 லட்சம் லஞ்சம் இரு அதிகாரிகள் கைது

ரூ.1 லட்சம் லஞ்சம் இரு அதிகாரிகள் கைது


ADDED : மே 01, 2024 01:41 AM

Google News

ADDED : மே 01, 2024 01:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:மதுரை நாராயணபுரத்தை சேர்ந்தவர் சபீர் காசிம், 32; ஏற்றுமதி தொழில் செய்பவர். தபால்தந்தி நகரில் இவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் உள்ளது. தங்கள் இடத்தில் கட்டுமான பணியை துவங்க ஒப்புதல் கேட்டு நீர்வளத்துறை பாசன உதவி பொறியாளர் மாயகிருஷ்ணன், 47, ஆய்வாளர் தியாகராஜன் ஆகியோரை அணுகினார்.

அவர்கள் ஒப்புதல் தர, 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டனர். முன்பணமாக, 1 லட்சம் ரூபாய் கேட்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சத்தியசீலனிடம் சபீர் காசிம் புகார் அளித்தார்.

போலீசாரின் அறிவுரை படி, நேற்று மாலை தல்லாகுளம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மாயகிருஷ்ணன், தியாக ராஜனிடம் 1 லட்சம் ரூபாய் லஞ்சத்தை சபீர் காசிம் வழங்கினார். அப்போது, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us