ADDED : ஆக 05, 2024 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: அகில பாரதிய துறவியர் சங்க தலைவர் ராமானந்த மகராஜ் தலைமையில் மதுரை கல்பாலத்தில் ஆடி பெருக்கை முன்னிட்டு மகாதீப ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. ஆன்மிக பெரியோர், அரசியல் கட்சித் தலைவர்கள், ஆன்மிக அமைப்புகளின் பொறுப்பாளர்கள், மதுரை மண்டல புரவலர்கள் பங்கேற்றனர்.
மதுரை மண்டல புரவலர் குழு தலைவர் மாரிச்செல்வம், பொதுச் செயலாளர் தங்கபாண்டியன், துணைத் தலைவர் பழனிவேல், செயலாளர் முரளி பாஸ்கர், முருகன், கோவிந்தன் பங்கேற்றனர்.