
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : பேரையூர் அத்திப்பட்டி பெத்தனாட்சி பெரியாண்டவர் கோயிலில் வைகாசி குலதெய்வ வழிபாடு மகோற்ஸவம் மே 15ல் காப்பு கட்டு நிகழ்ச்சியுடன் துவங்கியது.
மே 25ல் கணபதி ேஹாமம், புண்யாக வாஜனம் செய்து, பெத்தனாட்சி, பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிேஷகம் ஆராதனைநடந்தது. தொடர்ந்து விளக்கு பூஜை, மாவிளக்குடன் அம்மன் காமதேனு வாகனத்தில் நகர்வலம் வருதல் நடந்தது.
மறுநாள் மே 26ல் பால்குடம், முளைப்பாரியுடன் அம்மன் சிம்மாசனத்தில் நகர் வலம் வந்தார். தொடர்ந்து பெத்தனாட்சி அம்மனுக்கு சிறப்பு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை பூஜைகள் நடந்தன.