/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வலையங்குளம் மேம்பால பணி ரூ.36 கோடியில் துவக்கம்
/
வலையங்குளம் மேம்பால பணி ரூ.36 கோடியில் துவக்கம்
ADDED : மார் 08, 2025 04:00 AM
அவனியாபுரம்: மதுரை வலையங்குளத்தில் ரூ. 36.62 கோடியில் அமைய உள்ள மேம்பால பணிகளை காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
மாணிக்கம் தாகூர் கூறியதாவது: வலையங்குளம் பகுதியில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி ஒப்புதலுடன் மேம்பாலம் அமைய உள்ளது. இங்கு சாலைகளை கடக்கும்போது ஏராளமான உயிரிழப்பு நடக்கிறது. அதைதடுக்க பாலம் அமைய உள்ளது.
தமிழகத்தில் இரண்டு மொழிகளுக்கு மேல் குழந்தைகளால் படிக்க முடியாது. அவர்களைப் பொறுத்தவரை மொழி படிப்பது வாழ்க்கை கிடையாது. மொழியில் யார் வல்லுனராக வேண்டும் என நினைப்பவரோ, வெளிநாடு செல்ல நினைப்பவரோ மொழி படித்துக் கொள்ளலாம். தேவைக்காகத்தான் மொழியே தவிர மொழியை வைத்து வாழ்ந்துவிட முடியாது.
சந்திரபாபு நாயுடு 10 மொழியை படிக்க வைப்பேன் என்று கூறுகிறார். அவரது மகன், பேரனுக்கு 10 மொழியை சொல்லிக் கொடுத்து உள்ளாரா. சாமானிய மக்கள் பயன்படுத்தும் மொழியில் கல்வி வேண்டும். அதன் மூலமே சிந்திக்கும் திறன் மேம்படும். எனவேதான் இரு மொழிக் கொள்கையை ஆதரிக்கிறோம் என்றார்.