/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பா.பி., நிர்வாகி மீது வி.ஏ.ஓ., புகார்
/
பா.பி., நிர்வாகி மீது வி.ஏ.ஓ., புகார்
ADDED : மார் 06, 2025 03:16 AM
உசிலம்பட்டி : உசிலம்பட்டி தாலுகா கட்டக்கருப்பன்பட்டி வி.ஏ.ஓ., கவாஸ்கர். பொட்டுலுப்பட்டி வி.ஏ.ஓ., அலுவலகத்தில் இருந்த போது அதே கிராமத்தைச் சேர்ந்த பா.பி., கட்சி நிர்வாகி ஆதிசேடன், கர்நாடக மாநிலத்தில் வசித்து வரும் லட்சுமி என்பவரும், பொட்டுலுபட்டி ஊராட்சி பாப்பம்பட்டியில் வசிக்கும் புஷ்பம் என்பவரும் ஒருவரே என்ற சான்று வழங்க மனு கொடுத்துள்ளார்.
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடி, ஒற்றைச் சான்று வழங்க தனக்கு அதிகாரம் இல்லை. சட்டப்படி வழங்க முடியாது எனக்கூறியதால் தான் மிரட்டப்பட்டதாக வி.ஏ.ஓ., கவாஸ்கர், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினருடன் போலீசில் புகார் செய்தார். உசிலம்பட்டி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.