ADDED : ஆக 06, 2026 06:51 PM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி: மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த வி.சி.க., சார்பில் அய்யங்கோட்டையில் கட்சிக் கொடி அகற்றியதை கண்டித்து வாடிப்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் தமிழாளன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ், ராஜாராம், கடல் கேசன், பேரூர் செயலாளர்கள் சுரேந்திரன், பிரபாகரன், தனசேகர பாண்டியன் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் யுவராஜா வரவேற்றார். மாநில துணை பொதுச்செயலாளர் கனியமுதன், மண்டல செயலாளர்கள் கலைவாணன், மாலின், அமைப்புச் செயலாளர் இன்குலாப், மாவட்ட செயலாளர்கள் அரசமுத்து பாண்டியன், கலைச்செல்வன், மணியரசு, மரிய தங்கம், பஞ்சவீரன், அதிவீரபாண்டியன், பதினெட்டாம்படி ஆகியோர் பங்கேற்றனர். பேரூர் பொருளாளர் அருண்பாண்டி நன்றி கூறினார்.
