ADDED : ஜூன் 27, 2024 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான், : சோழவந்தானில் வி.சி.க., மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் செயலாளர் சிந்தனை வளவன் தலைமையில் நடந்தது.
துணை அமைப்பாளர் காளிமுத்து, ஒன்றிய செயலாளர் ராதா, பேரூர் செயலாளர் குமணன் முன்னிலை வகித்தனர். துணை அமைப்பாளர்கள் ஜெயச்சந்திரன், ரங்கசாமி சிறப்பு அழைப்பாளர்கள் எல்லாளன், மாநில அமைப்பு செயலாளர் திருமாலின் பங்கேற்றனர். லோக்சபா தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றிபெற்று கட்சி அங்கீகாரம் பெற்றதை வெற்றி விழாவாக கொண்டாடுவது, மேலவளவு வரும் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.