/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருப்பரங்குன்றத்தில் வேத பாராயணம்
/
திருப்பரங்குன்றத்தில் வேத பாராயணம்
ADDED : மார் 05, 2025 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி பிரம்மோத்ஸவத்தை முன்னிட்டு சன்னதி தெருவில் உள்ள பாலானந்த சுவாமிகள் மடத்தில் 118 வது ஆண்டாக யஜூர் வேதம், சாம வேத பாராயணம் இன்று துவங்கி மார்ச் 20 வரை நடக்க உள்ளது. தினமும் காலை காலை 8:30 மணி முதல் 11:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல் 5:00 மணி, வரை, இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை வேத பாராயணம் நடக்கிறது.
ஏற்பாடுகளை மகேஷ் வாத்யார், தர்மராஜ வாத்யார், மீனாட்சி சுந்தரம் வாத்யார், கணேச வாத்யார், பாஸ்கர ஸ்ரெளதிகள், ஸ்ரீராம ஸ்ரெளதிகள், விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.