/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாற்றுத்திறனாளி கிராம அலுவலர்கள் எதிர்பார்ப்பு
/
மாற்றுத்திறனாளி கிராம அலுவலர்கள் எதிர்பார்ப்பு
ADDED : மே 28, 2024 03:29 AM
மதுரை : 'பத்தாண்டு பணிபுரிந்த தங்களுக்கும் வி.ஏ.ஓ.,க்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும்' என மாற்றுத்திறனாளி கிராம உதவியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வருவாய்த்துறையில் வி.ஏ.ஓ.,க்கள் கிராம அளவில் அதிகாரிகளாக உள்ளனர். இவர்களுக்கு கீழ் கிராம உதவியாளர்கள் (தலையாரிகள்) உள்ளனர். நிலவரி வசூல், பட்டா உட்பட கிராம பிரச்னைகளில் வி.ஏ.ஓ.,க்களுக்கு உதவியாக இவர்களே செயல்படுகின்றனர். இவர்கள் பத்தாண்டு பணிமுடிந்த பின், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் வி.ஏ.ஓ.,க்களாக பதவி உயர்வு பெறுவர். அதன்படி பலர் பதவி உயர்வில் வி.ஏ.ஓ.,க்களாக உள்ளனர்.
ஆனால் மாற்றுத் திறனாளிகளுக்கு இப்பதவி உயர்வு மறுக்கப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். மதுரை வடக்கு தாலுகாவில் மட்டும் 50க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் உள்ளனர். இவர்களில் கணிசமான மாற்றுத்திறனாளிகளும் உள்ளனர்.
அரசு கிராம உதவியாளர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் சந்தனமுருகேசன் கூறுகையில், ''பத்தாண்டு பணிமுடிந்த பின் மற்றவர்களை போல் எங்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். இதுவரை மாற்றுத் திறனாளிகளுக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை'' என்றார்.