/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பழுதான தண்ணீர் தொட்டி பயத்தில் கிராம மக்கள்
/
பழுதான தண்ணீர் தொட்டி பயத்தில் கிராம மக்கள்
ADDED : மார் 22, 2024 05:05 AM

திருமங்கலம்: திருமங்கலம் ஒன்றியம் அம்மாபட்டி ஊராட்சியில் மேல்நிலை தொட்டி மூலம் 600க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. தொட்டியின் சிமென்ட் துாண்கள் பழுதடைந்துள்ளன. தொட்டியின் மேல் பகுதியிலும் சேதம் அடைந்துள்ளது. தினமும் தண்ணீர் நிரப்பி விநியோகிப்பதால் எப்போது இடியும் என்ற நிலை உள்ளது.
இது குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நிதி ஒதுக்கீடு இல்லாததால் புதிய தண்ணீர் தொட்டி அமைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. அருகிலேயே மற்றொரு குடிநீர் திட்டத்திற்காக மேல்நிலை தொட்டி கட்ட திட்டமிட்டனர். துாண்கள் மட்டும் அமைத்த நிலையில் ஓராண்டாக எந்த பணியையும் நடத்தாமல் நிறுத்தி வைத்துள்ளனர்.
இதனால் தொட்டி கட்டுவதற்காக கட்டிய இரும்பு கம்பிகள் துருப்பிடித்து சேதமடைந்துள்ளன. தண்ணீர் தொட்டியை விரைந்து கட்டவும், சேதமடைந்த தொட்டிக்கு பதிலாக புதிய தொட்டியை அமைக்கவும் கிராம மக்கள் வலியுறுத்தினர்.

