/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தெரு விளக்கு பராமரிப்பின்றி இருளில் மூழ்கிய கிராமங்கள்
/
தெரு விளக்கு பராமரிப்பின்றி இருளில் மூழ்கிய கிராமங்கள்
தெரு விளக்கு பராமரிப்பின்றி இருளில் மூழ்கிய கிராமங்கள்
தெரு விளக்கு பராமரிப்பின்றி இருளில் மூழ்கிய கிராமங்கள்
ADDED : ஆக 18, 2024 05:29 AM

மேலுார் : மேலுார் - திருப்பத்துார் மாநில நெடுஞ்சாலையில் தெருவிளக்குகள் பராமரிக்காததால் குற்றங்கள் அதிகரிக்கின்றன.
மக்கள் கூறியதாவது: நெடுஞ்சாலை பயன்பாட்டுக்கு வந்து ஓராண்டுக்குள் அம்மன்கோவில்பட்டியில் தெருவிளக்கு சாய்ந்து விட்டது. பல கிராமங்களில் தெருவிளக்குகள் எரியாமல் இருளில் மூழ்கி கிடக்கின்றன.
இது குறித்து பல முறை நாவினிபட்டி ஊராட்சி தலைவி தவுலத்பீவி, பொதுமக்கள் புகார் கூறியும் கண்டு கொள்ளவில்லை.
இருள்சூழ்ந்துள்ளதால் வழிப்பறி உட்பட குற்றசம்பவங்கள் மற்றும் விபத்து ஏற்படுகிறது. மாநில நெடுஞ்சாலை துறை ஆய்வு செய்து முறையாக பராமரிக்க வேண்டும் என்றனர்.
ரோடு ஒப்பந்த நிறுவன மேலாளர் ரவிக்குமார் கூறுகையில், ''பயன்பாட்டிற்கு வந்தது முதல் பராமரிப்பு தொகை மாநில அரசிடம் இருந்து வரவில்லை. தொடர்ந்து பராமரிக்கிறோம்'' என்றார்.