/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநில ஹாக்கியில் வாடிப்பட்டி வெற்றி
/
மாநில ஹாக்கியில் வாடிப்பட்டி வெற்றி
ADDED : மே 31, 2024 05:28 AM

வாடிப்பட்டி : வாடிப்பட்டி அரசு ஆண்கள் பள்ளியில் கே.வி.முனியாண்டி நினைவு கோப்பைக்கான மாநில ஹாக்கி போட்டி 3 நாட்கள் நடந்தது.
இறுதிப் போட்டியில் வாடிப்பட்டி எவர்கிரேட் அணி 4-1 என்ற கோல் கணக்கில் மதுரை திருநகர் அணியை வென்றது. 3 மற்றும் 4வது இடங்களை மதுரை ஜி.கே.,மோட்டார், ரிசர்வ் லைன் அணிகள் பிடித்தன. பரிசளிப்பு விழாவுக்கு பேரூராட்சித் தலைவர் பால்பாண்டியன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் போஸ் பாப்பையன், ஓய்வுபெற்ற விளையாட்டு அலுவலர் முருகன், மாநகராட்சி லயன் இன்ஸ்பெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தனர்.
தலைமை ஆசிரியர் இனிக்கோ எட்வர்ட் ராஜா வரவேற்றார். தமிழ்நாடு ஹாக்கி யூனிட் செயலாளர் செந்தில் ராஜ்குமார் பரிசு மற்றும் கோப்பை வழங்கினார். எவர்கிரேட் ஹாக்கி கிளப் செயலாளர் சிதம்பரம், துணைச் செயலாளர் சரவணன், கிருஷ்ணன், சிவக்குமார், செந்தில்குமார், குமரேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் வெள்ளைச்சாமி, சந்திரமோகன் உட்பட பலர் பங்கேற்றனர். கிளப் தலைவர் ராஜா நன்றி கூறினார்.