ADDED : ஆக 05, 2024 06:06 AM
மதுரை: ரத்ததான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆரோக்கியமான வாழ்கையை மேம்படுத்துவதும் ஒரு மைல் நடந்து புன்னகையுடன் வாழுங்கள்' என்ற முழக்கத்துடன் மதுரையில் வாக்கத்தான் நடந்தது.
ஆரோக்கிய வாழ்க்கை முறையைப் பேணுவதன் மூலம் 'ஊனமில்லா உலகம்' இலக்கை அடைவதை நோக்கமாகக் கொண்டது இந்நிகழ்வு. பேராசிரியர் சரவணன் தலைமை வகித்தார். கலெக்டர் சங்கீதா துவக்கி வைத்தார். மதுரை மருத்துவக் கல்லுாரி முதல்வர் தர்மராஜ், வேலம்மாள் மருத்துவக் கல்லுாரி முதல்வர் ரத்தினவேல், ப்ரீத்தி மருத்துவமனை தலைவர் சிவக்குமார், மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவ நிர்வாகி கண்ணன் பங்கேற்றனர்.
டாக்டர்கள் துரைராஜ், ராஜகோபாலன், ஷர்மிளா, பாலாஜி, ஆதர்ஷ் குமார், வெங்கடேஷ் பிரபு, சபரீஷ் குமார், பிரபு குமரப்பன் ரத்த குழுவை சேர்ந்தவராவர். மருத்துவ செவிலிய மாணவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.