ADDED : பிப் 24, 2025 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி : வீரசூடாமணி பட்டியில் 40 வருடங்களாக துவக்கப்பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டது.
இம்மையத்தில் சுந்தரராசபுரம், கண்டு மூக்கன்பட்டி, ஆத்துார் உள்பட பல கிராம குழந்தைகள் படித்தனர். போதிய பராமரிப்பு இல்லாமல் கட்டடம் சிதிலமடைந்ததால், 3 ஆண்டுகளுக்கு முன் மையம் இடிக்கப்பட்டது. அன்றுமுதல் தனியாருக்கு சொந்தமான இடத்தில் செயல்படுகிறது.
பெற்றோர்கள் கூறுகையில், ''புதிய அங்கன்வாடி மையம் கட்டும்படி, கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றி, ஒன்றிய அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளோம். அரசுக்கு சொந்தமான இடம் இருந்தும் கட்டாமல், தனியார் இடத்தில் செயல்படுவதால் அரசுக்கு வீண் செலவாகிறது. கலெக்டர் புதிய அங்கன்வாடி மையம் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.